டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு! டெல்லி முதல்வர் அதிரடி உத்தரவு!

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.2,400-லிருந்து, ரூ.800-ஆக குறைப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் அதிக அளவிலான பணம் செலவாவதால் மக்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள தயங்குகிறார்கள். இதனை அடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களின் வசதிக்காக பரிசோதனை கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளார்.

இதற்கு முன்பதாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு ரூ.2,400 செலவானது. ஆனால், தற்போது முதல்வரின் உத்தரவின் படி, இனிமேல் ரூ.800 க்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், குறைக்கப்பட்ட இந்த கட்டணம் குறித்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் விளம்பர பலகை வைக்க வேண்டும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.