கொரோனா பரிசோதனை 20 முறை பாசிட்டிவ்! 21-வது முறை நெகட்டிவ்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி என்ற கிராமத்தை சேர்ந்த ஷெர்லி அப்ரகாம்  என்ற பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை 20 முறை பாசிட்டிவ். 21-வது முறை நெகட்டிவ்.

இந்தியா  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில்,  கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி என்ற கிராமத்தை சேர்ந்த ஷெர்லி அப்ரகாம் (62). இவர் கடந்த மார்ச் 8-ம் தேதி கொரோனா அறிகுறியுடன்  மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டார்.

இவரது இரத்த மாதிரிகளை ஆய்வு செய்த மருத்துவர்கள் இவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்து, கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதித்துள்ளனர். பொதுவாக கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் 15 முதல் 20 நாட்களில் இந்த வைரஸ் நோயில் இருந்து குணமடைந்து விடுவர்.

மார்ச் 8-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு இத்தனை நாட்களில் சிகிச்சையின் போது மொத்தம் 20 முறை கொரோனா பரிசோதனை  செய்துள்ளனர். இந்த 20 முறையும் கொரோனா பரிசோதனை பாசிட்டிவ் என்று தான் வந்துள்ளது.

இதனையடுத்து, ஷெர்லிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், மருத்துவர்கள், மாற்றம் கொண்டு வந்தனர். 20 முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என வந்த ஷெர்லி அப்ரகாமிற்கு கடந்த இரண்டு முறை, கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து, ஷெர்லியை கொரோனா வார்டில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.