ஐரோப்பாவை தவிர எல்லா இடங்களிலும் கொரோனா பரவல் குறைந்துள்ளது – WHO!

ஐரோப்பாவை தவிர எல்லா இடங்களிலும் கொரோனா பரவல் குறைந்துள்ளது – WHO!

உலகில் ஐரோப்பாவை தவிர எல்லா இடங்களிலும் கொரோனா பரவல் குறைந்துள்ளது என WHO தனது வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக அளவில் ஐரோப்பாவில் தான் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிக அளவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில், உலக அளவில் சுமார் 3.1 மில்லியன் கொரோனா வழக்குகள் இருப்பதாகவும், இது முந்தைய வாரத்தை விட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் தொற்றுகளில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 1.9 மில்லியன் ஐரோப்பாவில் தான் பதிவாகி இருப்பதாகவும், ஐரோப்பாவில் 7 சதவீதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் உலகளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், துருக்கி மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளிலும் கொரோனா புதிய வழக்குகள் அதிக அளவில் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து நாடுகளிலுமே இறப்பு 4 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ஐரோப்பாவில் இறப்பு சதவீதம் 10 இறப்பு எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube