ஐஐடி-யை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா பரவல்.!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், முதுநிலை மாணவிகள் விடுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஏற்கனவே 104 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று மேலும் 79 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கிங் மருத்துவ மையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், முதுநிலை மாணவிகள் விடுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அறிக்கை கேட்டுள்ளது. வகுப்புகளை தள்ளி வைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்