மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி – தமிழக அரசுக்கு உத்தரவு!

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கிய கொரோனா நிவாரண நிதி ரூ.133 கோடியை முழுமையாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு.

கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.133 கோடி தமிழக அரசு ஒதுக்கப்பட்ட நிலையில், 6 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு, 64 கோடியே 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மிதமுள்ளவர்களுக்கு நிவாரண உதவி வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு ஒதுக்கப்பட்ட ரூ.133 கோடியில், ரூ.64.42 கோடி தரப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.73 கோடி நிலை என்ன? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து வழக்கை தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கிய கொரோனா நிவாரண நிதி ரூ.133 கோடியை முழுமையாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிவாரணம் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை முழுமையாக இல்லை என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

மேலும், ஒதுக்கீடு செய்த நிவாரண தொகையை மாற்று திறனாளிகளுக்கு தர ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கால் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி தரகோரிய வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்