அமீர்கான் வீட்டில் கொரோனா.! வருத்தத்தில் ரசிகர்கள்.!

பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,” எனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்த ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களை கவனமாக பார்ப்பதற்காக மும்பை சுகாதார துறை அதிகாரிகளுக்கு நான் மிகவும் நன்றி” செலுத்த கடமைப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.