கொரோனா தடுப்பு பணி: விராட் கோலி & அனுஷ்கா தம்பதி ரூ.2 கோடி நிதியுதவி‌..!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து கொரோனா நிவாரணத்துக்காக ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர். 

கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து ரூ.2 கோடி நிதியுதவியாக அளித்துள்ளனர். மேலும் இதுகுறித்து  அனுஷ்கா சர்மா ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ள வீடியோவில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் பேசியது ” நமது நாடு கொரோனா 2 வது அலைய எதிர்த்து போராடி வருகிறோம் நமது சுகாதார அமைப்புகள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. நம் மக்கள் கஷ்டப்படுவதைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. InThisTogether என்ற ஹாஷ்டேக் மூலம் ‘கெட்டோ’ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நானும் விராட்கோலியும் கொரோனா நிவாரணத்திற்கான நிதியை திரட்டுகிறோம். இந்த கடினமான காலத்தை நாம் அனைவரும்  இணைந்து எதிர்கொள்வோம். இந்தியர்களான நாம் இந்தியர்களுக்காக துணை நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்கள்.