12 மணிநேரத்தில் குணமடைந்த கொரோனா நோயாளி! மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

பிளாஸ்மா சிகிச்சை மூலம் 12 மணிநேரத்தில் குணமடைந்த கொரோனா நோயாளி. தமிழகம்

By leena | Published: Jun 10, 2020 12:22 PM

பிளாஸ்மா சிகிச்சை மூலம் 12 மணிநேரத்தில் குணமடைந்த கொரோனா நோயாளி.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்தது. 

இந்நிலையில், சில மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சோதனை வெற்றியடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்த பிளாஸ்மா சிகிச்சை மூலம், தீவிர கொரோனா நோய் தொற்றில்  இருந்த 54 வயது நிரம்பிய ஒருவர் 12 மணி நேரத்தில் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு பிளாங்ஸ்மா முறையை பின்பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Step2: Place in ads Display sections

unicc