அசாம் தேயிலைத் தோட்டங்களில் கொரோனா பரவல்: 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அசாம் தேயிலைத் தோட்டங்களில் கொரோனா பரவல்: 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அசாம் மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் கொரோனா பரவ ஆரம்பித்துள்ள நிலையில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் மக்கள் பாதுகாப்புடனும் சமூக இடைவெளியை பின்பற்றியும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அசாமிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 5000 பேர் அங்கு கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 46 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது, 31,579 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தினசரி 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் மற்றும் பிஸ்வநாத் ஆகிய  மாவட்டங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 300க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள கோகோய் எனும் மருத்துவர் ஒருவர், கடந்த ஆண்டு பல தேயிலைத் தோட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும் ஆனால் கொரோனா முதல் அலையின் போது தேயிலை தோட்டங்களில் தொற்று ,,அவ்வளவாக இல்லை எனவும் ஆனால் இந்த ஆண்டு மாநிலத்தில் வழக்குகள் அதிகரித்து இருப்பதால் தற்பொழுது தேயிலைத் தோட்டங்களிலும் கொரோனா பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.  மேலும் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தான் அதிகம் தொற்று உறுதியாக உள்ளதாகவும் மேலும் மற்றவர்களுக்கு பரவி விடாதபடிக்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube