கொரோனாவின் பிறப்பிடம் குறித்து 90 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு!

கொரோனாவின் பிறப்பிடம் குறித்து 90 நாட்களில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவர்கள் அமெரிக்க நுண்ணறிவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவியதா அல்லது ஆய்வகத்தில் இருந்து பரவியதா என்ற விசாரணையை நுண்ணறிவு அமைப்புகள் தீவிரமாக கண்டறிய வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அறிக்கையை 90 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டு கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் எங்கிருந்து எப்படிப் பரவியது என்பது குறித்து இறுதி முடிவுக்கு வரும் வகையில் நுண்ணறிவுப் பிரிவினர் ஆராய்ச்சியை மேற்கொண்டு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் எனதெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணைக்கு உதவியாக அமெரிக்க தேசிய ஆய்வுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், இந்த விசாரணையில் சீனாவை முழுமையாக ஈடுபடுத்தவும், வெளிப்படையாக தன்னிடம் உள்ள தகவல்கள் ஆதாரங்களை அளிக்க வலியுறுத்தவும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து அமெரிக்க பணியாற்றும் என தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்வதை தாமதப்படுத்தினால் இந்த விசாரணை தோல்வியில் தான் முடியும்.

இதனால் தான் தன் அதிபராக பொறுப்பேற்ற மார்ச் மாதம் முதலே கொரோனாவின் பிறப்பிடம் குறித்து விசாரணை நடத்த துவங்கியதாகவும், இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி தனக்கு கிடைத்த விசாரணை அறிக்கையில் கூறப்படும் இரண்டு சூழலில் கொரோனா பரவல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்றும், இதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்பதால் விரிவாக விசாரணை நடத்தி 90 நாட்களில் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நுண்ணறிவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal