கொரோனா மருந்து : 2022 வரை காத்திருக்க நேரலாம் – தலைமை விஞ்ஞானி சவுமியா

இளம் வயதினர் மற்றும்  ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி பெற 2022 வரை காத்திருக்க நேரலாம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  இதுகுறித்து உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அவர்கள் கூறுகையில், இளம் வயதினர் மற்றும்  ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி பெற 2022 வரை காத்திருக்க நேரலாம் என தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசி  கிடைத்தவுடன்,களப்பணியாளர்கள், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு  முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.