28 C
Chennai
Monday, January 18, 2021

தமிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா, 11 பேர் பலி.!

தமிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாதிப்பு நிலவரம்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,428 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 7,62,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 397 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 2,16,119ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்கள்:

தமிழகத்தில், கொரோனாவால் இன்று 11 பேர் பலியாகியுள்ளனர். அதில், 6 பேர் தனியார் மருத்துவமனையிலும், 5 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,733 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர்கள்:

கொரோனாவில் இருந்து இன்று 1,398 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 7,62,015 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாதிரிகள்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68,854 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,21,93,913 -ஐ கடந்துள்ளது.

Latest news

Related news