செவிலியர் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு கொரோனா-கர்நாடகா..!

கர்நாடகாவில் 100 செவிலியர் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது செவிலியர் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் தேதி அன்று கர்நாடகத்தில் செவிலியர் தேர்வு நடக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் கேரளாவை செர்ந்த 48 மாணவர்கள் பங்கேற்று உள்ளனர். இவர்களில் 21 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் செவிலியர் கல்லூரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 9 கல்லூரிகளில் கிட்டத்தட்ட 900 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இவர்களில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அறிகுரியற்ற நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.