வழக்குகளை ஒத்திவைத்தது-உச்சநீதிமன்றம்..ஊரடங்கு அமல்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல நிதிபதிகள் கொண்ட அமர்வுகள் செயல்படாது மற்றும் வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள உச்சநீதிமன்ற அறிக்கையில் 2.8,14 ஆகிய நீதிமன்றங்களில் நடக்க திட்டமிட்டிருந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.மேலும் தேவைப்படும் பட்சத்தில் 2 நீதிபதிகள் அடங்கி அமர்வு மட்டுமே வழக்குகளை விசாரிக்கும் , எத்தகைய அவசர வழக்காக இரூந்தாலும் அதனை காணொலி மூலமாகவே விசாரிக்கப்படும் என்றும் வழக்கறிஞர்கள் வாதிடும் போது நீதிபதி S.A பாப்டே மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வேறு தனியறையில் அமர்ந்து விசாரிக்கும்  என்று தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லி மார்ச்.,31 வரை ஊரடங்கு உத்தரவினை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அற்வித்துள்ளார்.இதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

author avatar
kavitha