உலகில் நடக்கும் அனைத்து போர்களையும் உடனே நிறுத்த அழைப்பு… ஐநா பொதுச்செயலளர் அழைப்பு

உலகையே அச்சுறுத்திவரும் இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றன. ஆனால், ஒரு பக்கம் கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துவரும் நிலையில் மறுபக்கம் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுச்சண்டை, பயங்கரவாத தாக்குதல்கள், கிளர்ச்சியாளர்கள்  என இடைவிடாமல் போர்கள் அரங்கேறித்தான் வருகிறது. இந்நிலையில், உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும்  உடனடியாக நிறுத்தும் படி உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்ட்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து  அவர் கூறுகையில், ” உலகின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்களையும், சண்டைகளையும் உடனடியாக நிறுத்தும்படி நான் அழைப்பு விடுக்கிறேன் என்றும்,  விரோதங்கள், அவநம்பிக்கை, பகைமை ஆகியவற்றில் இருந்து பின்வாங்கி ஆயுத சண்டைகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது உயிரை காக்க உண்மையான போர் செய்யும் (கொரோனா வைரஸ்) நேரம் வந்து விட்டது’’ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
author avatar
Kaliraj