விராட் கோலிக்கு கொரோனா தொற்று…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு லண்டன் சென்ற விராட் கோலி கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரானது ஜூலை 1-ஆம் தேதி நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் இங்கிலாந்தில் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிக்கு பின் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், அவர் தனது மனைவியுடன் மாலத்தீவில் விடுமுறையைக் கழித்தார்.  அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு லண்டன் சென்ற விராட் கோலி கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பிசிசிஐ தரப்பில் விராட் கோலி உள்பட கொரோனாவால் வீரர்கள் சிலர் பாதிக்கப்பட்டது குறித்து அதிகாரபூர்வமாகத் தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here