சிங்கப்பூர் சிறையில் சமையல் செய்பவருக்கு கொரோனா தொற்று உறுதி….! 5,000 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை…!

சிங்கப்பூர் சிறையில் சமையல் செய்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 5,000 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை.

சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிறைசாலையிலுள்ள A5ல் அமைந்துள்ள சிறை சமையலறையில் பணிபுரியும் 39 வயதான ஒப்பந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சினைகள் இருந்துள்ளது.

 அவருக்கு பரிசோதனை செய்வதில் கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு  கொரோன பரிசோதனை செய்யப்பட உள்ளதாக சிறை துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகள், சிறைச்சாலையில் மற்ற கைதிகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்படுவர்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமையல்காரர் பணிபுரிந்த A5 பகுதியில்,  குடும்ப வருகைகள், ஆலோசனை அமர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது.  சிங்கப்பூரில் 61 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 31 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.