தமிழகத்தில் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! 39 பேர் உயிரிழப்பு..!

corona

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 கடந்த 24 மணி நேரத்தில், 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 39 பேர் உயிரிழந்துள்ளனர். 19,978 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 1,79,205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும், 7,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.