மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி .!

மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான நடிகர் துருவா சார்ஜாவிற்கும்,

By ragi | Published: Jul 16, 2020 10:59 AM

மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான நடிகர் துருவா சார்ஜாவிற்கும், மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

கன்னட நடிகரும், அர்ஜூன் அவர்களின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்து. இதுவரை அதிலிருந்து மீளாத அந்த குடும்பத்திற்கு மீண்டும் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் மற்றும் சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான நடிகர் துருவா சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, எனக்கும், எனது மனைவிக்கும் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் விரைவில் மீண்டு வருவோம் என்றும், எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது பிரபலங்கள் பலர் விரைவில் அவர்கள் குணமடைய வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc