அபுதாபியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?

அமீரகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என கேள்வியெழுந்துள்ளது.

உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்துள்ளார்.

மேலும், அதற்கான அட்டவணையையும் விரைவில் வெளியாகுமெனவும் தெரிவித்தார். இந்த தொடரில் பங்கேற்க 8 அணியின் வீரர்கள் அமீரகம் சென்றடைந்தனர். இந்தநிலையில், அபுதாபியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அமீரகத்தில் கொரோனா பரவிவரும் சூழலில், ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை அறிவிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக ஐபிஎல் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, போட்டிகளை குறைக்கலாமா? என்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.