தமிழகத்தில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு…!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,063 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,063 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 567 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் 497 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment