தமிழகத்தில் அதிரடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி கடந்த 10ஆம் தேதி தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்துள்ளனர். 17,456 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். சென்னையில் நேற்று 8,335 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 8,007 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றை  தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.