மூத்த விஞ்ஞானிக்கு கொரோனா - ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடல்.!

விஞ்ஞானிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதால் ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடப்பட்டுள்ளது. விஞ்ஞானி

By balakaliyamoorthy | Published: Jun 01, 2020 12:09 PM

விஞ்ஞானிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதால் ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடப்பட்டுள்ளது.

விஞ்ஞானி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமையகம் மூடப்பட்டது. கடந்த வரம் மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்த ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விஞ்ஞானிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதால் ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடப்பட்டுள்ளது. 

இதனிடையே ஐசிஎம்ஆர் விஞ்ஞானி கடந்த வாரம் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் ஐசிஎம்ஆர் இயக்குனர் டாக்டர் பால்ராம் பார்கவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனால் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்கவும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஐசிஎம்ஆர் கட்டடத்தில் கிருமி நாசினி தெளிப்பு போன்ற தூய்மைப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Step2: Place in ads Display sections

unicc