கொல்கத்தா அணியில் மேலும் இரண்டு வீரர்களுக்கு கொரோனா..!!

டிம் சீஃபர்டு மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசாந்த் கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் நடப்பாண் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் டிம் சீஃபர்டு மற்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசாந்த் கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதால் டிம் சீஃபர்ட் மற்ற வீரர்களுடன் தனது நாட்டுக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக செய்யும் பரிசோதனை செய்வதில் நெகட்டிவ் வந்தால் மட்டும் தனது நாட்டிற்கு செல்ல ஏற்பாடுகள் நடத்தப்படும் என்றும் அதுவரை அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து கொடுக்க படும் என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொல்கத்தா அணி வீரர்களான சந்தீப் வாரியார், மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இரண்டு பெரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.