ட்ரம்பின் மூத்த மகனின் காதலிக்கு கொரோனா.!

அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பின் மூத்த மகனின் காதலியும், டிரம்ப் மறுதேர்தல் பிரச்சாரத்திற்கான உயர்மட்ட நிதி திரட்டும் அதிகாரியுமான கிம்பர்லி கில்ஃபோயிலுக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு மற்றும் ரஷ்மோர் மவுண்டில் வானவேடிக்கை கொண்டாட்டத்தை பார்க்க தெற்கு டகோட்டாவுக்கு கிம்பர்லி  சென்றிருந்தார். அப்போது  ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் என்று கருதப்படும் அனைவருக்கும் வழக்கமாக  நடத்தப்பட்ட சோதனையில் கிம்பர்லி கில்ஃபோயிலுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாக  நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

author avatar
murugan