சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா., 1000-ஐ தாண்டியது பாதிப்பு.!

சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஐஐடி முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்றுவரை 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 33 பேருக்கு உறுதியாகியுள்ளது.

மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 444 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஐஐடி மாணவர்களுக்கு அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கிங் மருத்துவ மையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்படக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்