பஞ்சாபில் உள்ள 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா.!

பஞ்சாபில் உள்ள 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா.!

பஞ்சாபில் 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நடத்த உத்தரவிட்டதை அடுத்து, அதற்கு தடை கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், அதனை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் எதிர்கட்சிகளை சேர்ந்த மாநில முதல் மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

அப்போது, பேசிய பஞ்சாப் முதல் மந்திரியான அமரீந்தர் சிங், கொரோனா சூழலில் நுழைவுத் தேர்வு நடத்துவதன் மூலம் பல லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், எனவே தேர்வை நிறுத்தி வைக்க கோரி சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும் பஞ்சாபில் சட்டசபை கூட்டத் தொடருக்கு 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மந்திரி மற்றும் அமைச்சர்களுக்கே இந்த நிலைமை எனில், நிலைமை எப்படி என்று நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும் என்று கூறினார். எனவே, இந்த இக்கட்டான சூழலில் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத முடியாது என்று அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.

Join our channel google news Youtube