சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே குடியிருப்பில் 14 பேருக்கு தொற்று உறுதி!

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே குடியிருப்பில் 14 பேருக்கு தொற்று உறுதி!

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் 7 வீடுகளை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில், தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து, அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி, எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதமும், முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மேலும், சென்னையில் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு வீடு, வீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் 7 வீடுகளை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் வசித்த குடியிருப்பை மாநகராட்சி அதிகாரிகள் சில் வைத்தனர். சென்னையில் 600க்கும் மேற்பட்ட பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube