#CoronaUpdate: சென்னையில் மேலும் 1,369 பேருக்கு கொரோனா

சென்னையில் மேலும் 1,369 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,76,779 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 1,096 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 1,60,333 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,336 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 13,110 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.