மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் கொரோனா அச்சம்.. தனிமைப்படுத்தப்பட்ட குதிரை!

ஜம்மு காஷ்மீரில் தனது முதலாளியை சுமந்து வந்த குதிரை, கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டது. 

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மேலும் 7,293 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 158,086 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,534 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் கொரோனா தோற்றால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள ஷோபியானிலிருந்து ரஜெளரி மாவட்டதிற்கு சாலை வழியாக குதிரையும், அதனின் முதலாளியும் வந்து சேர்ந்தனர். அங்கு வந்த அவரை தனிமைப்படுத்தப்படும் மையத்தில் தங்கவைக்கப்பட்டு, அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும், அவர் வந்த குதிரையையும் தனிப்படுத்தப்பட்டு, கால்நடை மருத்துவர்கள் அதற்க்கு கொரோனா பரிசோதனை நடத்தினர். அப்பொழுது அதற்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏளினும், அதனை மற்ற குதிரைகளுடன் வைக்காமல் அதனை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது, மேலும், அதனின் முதலாளிக்கு இன்னும் முடிவுகள் வெளிவராதது குறிப்பிடத்தக்கது.