கொரோனா எதிரொலியால் ஆஸ்கார் விதியில் மாற்றம்!

கொரோனா எதிரொலியால் மாற்றம் செய்யப்பட்ட ஆஸ்கார் விதி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவது, மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,  திரையரங்குகளுக்கு மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், ஓடிடி காலங்களில் வெளியாகும் படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்குமா என்ற அச்சம் நிலவி வந்தது. 

அதாவது ஒரு திரைப்படம், ஆஸ்காருக்கு அனுப்பப்பட வேண்டுமானால், குறைந்தது 1 வாரமாவது திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. தற்போது கொரோனா எதிரொலியால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், நேரடியாக இணைய தளங்களில் வெளியாகும் படங்களும் ஆஸ்காருக்கு அனுப்பலாம் என விதி மாற்றப்பட்டுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.