அமெரிக்காவில் படி படியாக குறையும் கொரோனா பலி எண்ணிக்கை!

அமெரிக்காவில் படி படியாக குறையும் கொரோனா பலி எண்ணிக்கை. முதலில் சீன நாட்டில்

By leena | Published: Jun 08, 2020 09:29 AM

அமெரிக்காவில் படி படியாக குறையும் கொரோனா பலி எண்ணிக்கை.

முதலில் சீன நாட்டில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் நாளுக்குநாள் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்காக மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால்  உலக அளவில் இதுவரை, 7,091,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406,192 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், இதுவரை அமெரிக்காவில், 2,007,449 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 112,469 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதமாக அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது இந்த பலி எண்ணிக்கை படி படியாக குறைந்து வருகிறது. நேற்று, இந்த வைரஸ் பாதிப்பால், 373 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Step2: Place in ads Display sections

unicc