#Corona death: தமிழகத்தில் கொரோனா மட்டுமின்றி மற்ற நோயால் 107 பேர் உயிரிழப்பு.!

#Corona death: தமிழகத்தில் கொரோனா மட்டுமின்றி மற்ற நோயால் 107 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 107 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில்  இன்று ஒரே நாளில் 5,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 9-ம் நாளாக கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.இன்று ஒரே நாளில் 118 பேர் பலி.  இன்று உயிரிழந்த 118 பேரில், தனியார் மருத்துவமனையில் 47 பேரும், அரசு மருத்துவமனையில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

 

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube