கொரோனா ஊரடங்கால் தடைபட்ட திரைப்பட தயாரிப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் - அமைச்சர் ஜவடேகர்

திரைப்பட தயாரிப்பை மீண்டும் துவங்குவதற்கான எஸ்ஓபி எனப்படும் நிலையான

By leena | Published: Jul 07, 2020 05:17 PM

திரைப்பட தயாரிப்பை மீண்டும் துவங்குவதற்கான எஸ்ஓபி எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா ஊரடங்கால், திரைப்படம், டிவி சீரியல், கோ - ப்ரொடக்சன் என அனைத்து பட தயாரிப்புகளுமே தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், செய்தி - ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், கொரோனா பரவலால் முடங்கி உள்ள திரைப்பட தயாரிப்பை மீண்டும் துவங்குவதற்கான எஸ்ஓபி எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc