#Corona:துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு கொரோனா உறுதி!

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய இயல்பு நிலைக்கு நாடு திரும்புவதற்கான முயற்சியாக அமெரிக்கா அரசு கட்டுப்பாடுகளை சமீபத்தில் தளர்த்திய நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக உயிரிழப்புகள் ஒரு நாளைக்கு 300 ஐ எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே,நேற்று காலை அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் தினசரி ஆலோசனையில் கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தார்.ஆனால் கமலா அவர்களின் கலிபோர்னியா பயணம் காரணமாக,அவர் கலந்து கொள்ளவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.மேலும்,ஏப்ரல் 18 திங்கள் அன்று ஹாரிஸ் கடைசியாக பைடனைப் பார்த்துள்ளார் எனவும், அதன்பின்னர்,கலிபோர்னியாவுக்கு சென்று ஒரு வாரகால பயணத்திலிருந்து துணை ஜனாதிபதி கமலா கடந்த  திங்களன்று திரும்பிய நிலையில்,அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால்,துணை ஜனாதிபதி கமலா தனது இல்லத்தில் தனிமைப்படுத்தப்படுவார் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.எனினும்,அவர் வீட்டில் இருந்தபடி அரசுப் பணிகளை தொடர்ந்து ஆற்றுவார்.மேலும் அவர் கொரோனா வைரஸுக்கு எதிர்மறையான சோதனை செய்தால் மட்டுமே வெள்ளை மாளிகைக்குத் திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

57 வயதான ஹாரிஸ்,மாடர்னா கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்தியுள்ளார்.மேலும்,கடந்த அக்டோபர் மாத இறுதியில் பூஸ்டர் தடுப்பூசி மற்றும் ஏப்ரல் 1 அன்று கூடுதல் பூஸ்டர் தடுப்பூசியும் பெற்றுள்ளார்.இந்த நிலையில்,அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து கமலா கூறுகையில்:

“நான் கொரோனா நேர்மறை சோதனை செய்தேன்.ஆனால்,எனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை.மேலும் CDC வழிகாட்டுதல்களின்படி தனிமைப்படுத்தி கொண்டேன்.தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஆகிய இரண்டிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்”,என்று கூறியுள்ளார்.