7.11 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு – மொத்த பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகளவில் 7.11 லட்சத்தை கடந்துள்ள கொரோனா உயிரிழப்பு, மொத்த பாதிப்பு  1.89 கோடியாக அதிகரிப்பு.

உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தற்பொழுது வரை உலகம் முழுவதிலும் மொத்தமாக 711,220 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகளவில் கொரோனாவால் 18,975,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர 12,163,754 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.

தற்பொழுது மருத்துவமனைகளில் 6,098,805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக 271,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல உலகளவில் நேற்று ஒரே நாளில்6,838  பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மாற நாம் வீட்டிலேயே தனித்திருப்போம், கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்திருப்போம்.

author avatar
Rebekal