அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா உறுதி!

அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா உறுதி!

அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா உறுதி.

இலங்கையைச் சேர்ந்த நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா இறந்ததை தொடர்ந்து அவருடைய உடல் மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எரிக்கப்பட்டது. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அங்கொடா லொக்காவின் காதலி அம்மானி தான்ஞி, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் என 3 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

கோவையில் இருந்து டி.எஸ்.பி. பரமசாமி தலைமையில் 10 பேர் கொண்ட குழு மதுரையில் நேரடி விசாரணை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி. போலீசார், சிவகாமி சுந்தரி தங்கியிருந்த வீடுகளில் தொடர்ந்து 3 நாட்களாக மேலாக சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, மதுரையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. உயரதிகாரி ஒருவர், இந்த 10 பேருக்கு உதவுவதற்காக, இவர்களுடன் துணையாக இருந்து வழக்கை விசாரித்து வந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக தற்போது இந்த வழக்கு விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் அங்கொடா லொக்கா மரணம் தொடர்பாக விசாரித்து வந்த மற்ற சிபிசிஐடி போலீசாரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube