தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

இன்று தமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 5,871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 3,14,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 5,633 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை கொரோனாவில் இருந்து 2,56,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 993 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,059ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,278 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Latest Posts

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!
சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!