தமிழகத்தில் ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

இன்று தமிழகத்தில் புதிதாக 5,063 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 5,063 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 2,68,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 6,501 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை கொரோனாவில் இருந்து 2,08,784 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,023 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,04,027 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,349 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Latest Posts

நேற்று நடந்த போட்டியில் தோனி 7வது இடத்தில் இறங்கியது ஏன்..?
பீகாரில் செப்டம்பர் 28 முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு.!
2 வாரத்தில் ரூ .1.83 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் .. குஜராத் காவல்துறை.!
ஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் -  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
16 பேர் கொண்ட கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர் யாருமில்லை - மு.க. ஸ்டாலின்
கண்டெய்னரில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு..!
கடனை கொடுத்த பின்பும் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்!
மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதாவை நிறைவேற்றம் ..!