பாதுகாப்பு உடையணிந்து தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கொரோனா நோயாளி.!

புதுக்கோட்டையில் கொரோனா நோயாளி ஒருவர், தகுந்த பாதுகாப்பு உடையணிந்து

By manikandan | Published: Aug 02, 2020 06:22 PM

புதுக்கோட்டையில் கொரோனா நோயாளி ஒருவர், தகுந்த பாதுகாப்பு உடையணிந்து தனது தந்தைக்கு இறுதிச்சடங்கினை மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த தமிழரசன் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு இறுதி சடங்கு செய்யும் ஒரே மகன் கொரோனா பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்த தமிழரசன் மகன் அரங்கநாதன் மருத்துவமனை நிர்வாகம் மூலம் 108 ஆம்புலன்ஸில் இறுதிசடங்கு நடக்கும் இடத்திற்கு தகுந்த பாதுகாப்பு உடையணிந்து தனது தந்தைக்கு இறுதிச்சடங்கினை மேற்கொண்டார்.

கொரோனா சிகிச்சையிலும் தனது தந்தைக்கு ஆற்ற வேண்டிய இறுதி சடங்கை ஆற்றிய மகனின் செயல் அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc