சமையல் சுவையாக இல்லாத காரணத்தால் மனைவியிடம் விவகாரத்து கேட்ட கணவர்!

மும்பை உயர்நீதிமன்றம், மனைவி காலையில் தாமதமாக எழுந்திருப்பதாகவும், சுவையாக சமைப்பதில்லை என்று கூறியும் விவகாரத்து கேட்டவரின் மனுவை  நிராகரித்துவிட்டது.

மும்பையின் சாந்தாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மனைவியிடமிருந்து  விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவில் காலையில் விரைவாக எழுப்ப முயன்றால், தன்னையும் தனது பெற்றோரையும் மனைவி வசைபாடுவதாகவும், மாலையில் 6 மணிக்கு வேலைமுடிந்து வந்து தூங்குவதாகவும் இரவு 8.30 மணிக்குத்தான் இரவு உணவை தயாரிப்பதாகவும் புகார் மனுவில் கணவர் குற்றம்சாட்டியிருந்தார். சுவையாகவும் போதிய அளவிலும் மனைவி உணவு தயாரிப்பதில்லை என்றும், தாம் வேலைமுடிந்து தாமதமாக வந்தால் தனக்கு ஒரு டம்ளர் தண்ணீர்கூட தருவதில்லை என்றும் கணவர் புகார் கூறியிருந்தார். தாமதமாக எழுந்திருப்பது, சுவையாக உணவு சமைப்பதில்லை என்பதெல்லாம் சட்டத்தின் பார்வையில் கொடுமைப்படுத்துவது அல்ல என்று கூறி கணவரின் மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment