தளபதி 65- யில் குக் வித் கோமாளி புகழ்…?

தளபதி 65- யில் குக் வித் கோமாளி புகழ்…?

விஜயின் 65 வது திரைப்படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களை கவர்ந்த புகழ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை சன்பிக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்க்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடித்து விட்டு அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்பாகவே வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களை கவர்ந்த புகழ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube