சர்ச்சை…10 ஆம் வகுப்பு பாடத்தில் பெரியார்,நாராயண குரு பற்றியவை நீக்கம்!

narayanaguru,periyar

சமூக சீர்திருத்தவாதிகளான ஸ்ரீ நாராயண குரு மற்றும் தந்தை பெரியார் பற்றிய பாடங்களை 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டதில் இருந்து கர்நாடக அரசு நீக்கியுள்ளது.

அண்மையில் பாஜக அரசு ஆளும் கர்நாடகா மாநிலத்தில்,ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் தொடர்பாக பள்ளிப் பாடப்புத்தகங்களில் சேர்த்ததற்கு ஏற்கனவே கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில்,கர்நாடக பாடநூல் கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்ட 10 ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் பகுதி-1 பாடப்புத்தகத்தின் PDF இல் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார்,ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து,காங்கிரஸ் எம்.எல்.சி.யும்,தட்சிண கன்னடா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கே.ஹரீஷ் குமார் கூறியதாவது:”இந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த சிவகிரி யாத்திரையின் 90-வது ஆண்டு விழாவில் ஸ்ரீ நாராயணகுருவின் பிரசங்கங்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியது வெறும் நாடகமா? நாராயணகுரு மற்றும் பெரியார் குறித்த பாடங்கள் ஒதுக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்தக்கது.

இந்த மாபெரும் சமூக சீர்திருத்த ஆளுமைகளைப் பற்றிய பாடங்களை பாஜக அரசு உடனடியாக பாடப்புத்தகத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும், தவறினால் வரும் நாட்களில் பெரும் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்”, என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.ஆர் லோபோ கூறுகையில்:”இந்த நடவடிக்கையானது மாபெரும் சமூக சீர்திருத்தவாதியை அவமானப்படுத்துவதாகவும்,பாடப்புத்தகங்கள் இன்னும் அச்சிடப்படாமல் இருப்பதால் பாடத்தை மீண்டும் சேர்க்க அரசுக்கு இன்னும் காலஅவகாசம் உள்ளது”, என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here