நக்சலைட் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள்! பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததிராயின் ‘walking with comrades’ புத்தகம்!

நக்சலைட் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றதால், பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததிராயின் ‘walking with comrades’ புத்தகம்.

அருந்ததிராய் எழுதிய ‘walking with comrades’ என்ற புத்தகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகமானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, எம்.ஏ இலக்கிய படத்தில் இடம் பெற்றிருந்த அருந்ததிராய் எழுதிய ‘walking with comrades’ என்ற புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள துணைவேந்தர், நக்சலைட் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததால், ஏ.பி.வி.பி உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இந்த புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.