எதிர்கட்சிகளை ஏசாமல் ஒழுங்கா கொரோனாவை கட்டுப்படுத்துங்கள் – மு.க.ஸ்டாலின்

ஜூன் மாத ஊரடங்கு அறிவிப்பை விளம்பரத்துக்காக வீணடிக்காமல் முறையாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நிறைவடைய இருந்த ஊரடங்கு ஜூன் 30 வரை தளர்வுகளுடன் நீடிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் unlock1.0 என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்திலும் கொரோனா தீவிரம் காரணமாக தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை அமலபடுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜூன் மாத ஊரடங்கு அறிவிப்பை விளம்பரத்துக்காக வீணடிக்காமல் முறையாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும்.  முதல்வர் பழனிசாமியின் ஆணவம், அலட்சியம், கையாலாகாத்தனம், பொறுப்பின்மைக்குத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்கனவே பெரிய விலையைக் கொடுத்துள்ளார்கள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுகவுக்குள் குழு அரசியல் நடத்த எதிரிக்கட்சிகளை ஏசவும், பேசவும் செய்வதால் எந்த பயனும் ஏற்படாது என்றும் ஜூன் மாத பொதுமுடக்கத்திலாவது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்