தொடர் போராட்டம்: தனது பதவியை ராஜினாமா செய்த சிறைத்துறை டிஐஜி.!

தொடர் போராட்டம்: தனது பதவியை ராஜினாமா செய்த சிறைத்துறை டிஐஜி.!

Default Image

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கடந்த 18 நாட்களாகப் போாரட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநில விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த பலனும் கிட்டவில்லை.

இதனிடையே, நாடு முழுவதும் பாரத் பந்த் என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது கூட மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மத்திய அரசால் வழங்கப்பட்ட விருதுகளை விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் திரும்ப அளிக்க போவதாக கூறப்பட்டது. மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்களை என பலரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசு வேளாண் சட்டங்களி திரும்ப பெறாததால், நாளை முதல் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஜாகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வமான கடிதத்தை இன்று தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதை பஞ்சாப் காவல்துறை உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து பேசிய அவர், நான் முதலில் ஒரு விவசாயி, பின்னர் போலீஸ் அதிகாரி. இன்று எனக்கு எந்த பதவி கிடைத்தாலும், அதற்கு காரணம் எனது தந்தை வயல்களில் விவசாயியாக பணியாற்றி என்னை படிக்க வைத்தார். எனவே, நான் எப்போதும் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். 56 வயதான ஜாகர்ஒரு குற்றசாட்டு தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டார். 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube