திருமணம், இறுதிச் சடங்குகளுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்.!

திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கும், இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்ட பிறகு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த 4 ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருமணம் மற்றும் இறுதி சடங்கிற்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் திருமணம் நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 50 பேருக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்