இலங்கையில் தொடரும் கனமழை – 2.71 லட்சம் பேர் பாதிப்பு; 17 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் தொடரும் கனமழை – 2.71 லட்சம் பேர் பாதிப்பு; 17 பேர் உயிரிழப்பு!

  • இலங்கையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
  • இந்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலுள்ள கம்பா, இரத்தினபுரா, கொழும்பு, பட்டாளம் உள்ளிட்ட பத்துக்கும்  மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அங்கு உள்ள  களனி, தெதரு, களு உள்ளிட்ட சில ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது.

குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2.71 லட்சம் பேர் இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 800 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 16,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப் பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை இலங்கையில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மற்றும் கப்பல் படையினர் போர்க் கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில தினங்களுக்கு இலங்கையில் கனமழை பெய்யும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் குடிபெயர்ந்து வருகின்றனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube