கனிமொழி தொடர்ந்த வழக்கு ! தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்.பி. கனிமொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் ,இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை   அவரை எதிர்த்துபோட்டியிட்ட முன்னாள்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கு பின் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற  தமிழிசை  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்பு அவர் வாபஸ் பெற்ற நிலையில் ,கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கில்  தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலாக வழக்கை நடத்த அனுமதி கோரி வாக்காளர் முத்துராமலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு இடையில் ,திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு செய்தார்.அந்த வழக்கின் விசாரணையில், ,அவரது வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.

இந்த நிலையில் இன்று தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்.பி. கனிமொழி மனு தாக்கல் செய்தார் .இந்த வழக்கில் முத்துராமலிங்கம்,தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் வழக்கினை மார்ச் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.