கொரோனா தொற்று உள்ளவருடன் தொடர்பு! தனிமையில் உலக சுகாதார நிறுவன தலைவர்!

கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக செயலாற்றி வருபவர் அதானம் கெப்ரியேஸஸ். இவருடன் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தொடர்பில் இருந்துள்ளார். இதனையடுத்து, இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், அதானம் தனது ட்வீட்டர் பக்கத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது. நான் நலமுடன் உள்ளேன். அறிகுறிகள் ஏதும் இல்லை. ஆனாலும், உலக சுகாதர நிறுவனத்தின், வரைமுறைகளின்படி என்னை தனிமைப்படுத்திக் கொள்வேன். வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்வேன்.

நாம் அனைவரும் சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி செயல்படுவது மிகவும் முக்கியம். அவ்வாறு செயல்பட்டால் தான் வைரஸ் சங்கிலியை உடைக்க முடியும். வைரஸை ஒழிக்க முடியும். கொரோனா பரவலில் இருந்து மக்களை காக்கும் பணியில், நானும், என்னுடன் பணிபுரிபவர்களுக்கு தொடர்ந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.